ADDED : ஆக 21, 2026 07:02 PM
அ நிறம் | அளவு
திட்டக்குடி, ஆக. 22–
திட்டக்குடி, பட்டம்மாள் நகரைச் சேர்ந்தவர் ரமேஷ், 45. பெட்டிக்கடை நடத்தி வந்தார். கேன்சர் பாதிக்கப்பட்டு, கையில் அறுவை சிகிச்சை செய்துள்ளார். அடிக்கடி கையில் வலி இருந்து வந்தது. கடந்த 19ம் தேதி வலி அதிகமானதால் மதுவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து குடித்து மயங்கி விழுந்தார்.
உடன் அவரை, அரியலுார் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று முன்தினம் இரவு இறந்தார். திட்டக்குடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
