ADDED : நவ 09, 2024 05:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி : பண்ருட்டி அருகே குட்கா பொருட்கள் விற்பனை செய்த பெட்டிக்கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்.
பண்ருட்டி அடுத்த புதுப்பிள்ளையார்குப்பம் பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக காடாம்புலியூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையில் போலீசார் அப்பகுதியில் உள்ள கோபாலகிருஷ்ணன் என்பவரது பெட்டிக்கடையில் சோதனை நடத்தினர். கடையில் இருந்து 37 பண்டல் ஹான்ஸ் பாக்கெட்களை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து, கோபாலகிருஷ்ணனை கைது செய்தனர்.