/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வரி உயர்வை கண்டித்து 22ம் தேதி கடையடைப்பு வர்த்தக சங்கத்தினர் அறிவிப்பு

ADDED : பிப் 16, 2025 03:09 AM

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில் வரி உயர்வை கண்டித்து வரும் 22ம் தேதி கடையடைப்பு நடத்த வர்த்தக சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
நெல்லிக்குப்பம் நகர மனிதநேய மக்கள் கட்சி,வர்த்தக சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் நேற்று நகராட்சி கமிஷ்னர் கிருஷ்ணராஜனை சந்தித்தனர்.
அப்போது நகரத்தின் பல பகுதிகளில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்வதில்லை. நகராட்சிக்கு எதற்காக வரி கட்ட வேண்டும். வரி கட்டுவதை விட நாங்களே எங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொள்கிறோம்.
குடிப்பதற்கு கூட நல்ல குடிநீர் வழங்குவதில்லை. வரியை குறைக்காவிட்டால் இந்த ஆட்சிக்கு முடிவு கட்ட இதுவே காரணமாகி விடும் என எதிர்ப்பு தெரிவித்த பேசினர்.
இதற்கு பதில்அளித்த கமிஷனர், வரி உயர்வு இங்கு மட்டுமல்ல, தமிழகம் முழுதும் உயர்த்தப்பட்டுள்ளது. குறித்த காலத்தில் வரியை செலுத்தினால் 5 சதவீத தள்ளுபடி கிடைக்கும் என்றார்.
இதில், அதிருப்தி அடைந்த அனைவரும் கமிஷனரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
தொடர்ந்து, வரியை குறைக்கும் வரை வரி கட்ட மாட்டோம்.
வரி உயர்வை கண்டித்து வரும் 22ம் தேதி கடையடைப்பும் ஆர்ப்பாட்டமும் நடத்தப்படும் என அறிவித்து விட்டு கலைந்து சென்றனர்.