/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
உடற்கல்வி ஆசிரியர்கள் பற்றாக்குறை; மாவட்டத்தில் மாணவர்கள் தவிப்பு
/
உடற்கல்வி ஆசிரியர்கள் பற்றாக்குறை; மாவட்டத்தில் மாணவர்கள் தவிப்பு
உடற்கல்வி ஆசிரியர்கள் பற்றாக்குறை; மாவட்டத்தில் மாணவர்கள் தவிப்பு
உடற்கல்வி ஆசிரியர்கள் பற்றாக்குறை; மாவட்டத்தில் மாணவர்கள் தவிப்பு
ADDED : டிச 12, 2024 08:01 AM
கடலுார்; தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை வாரத்துக்கு இரண்டு பாட வேளைகள் உடற்கல்வி பாடத்துக்காக ஒதுக்கப்படுகின்றன. ஆனால் பெரும்பாலான அரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களே இல்லை.
தமிழகம் முழுவதும் 7ஆயிரத்திற்கும் மேற்பட்ட உடற்கல்வி ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன.
அதேபோல் உடற்கல்வி பாடத்திற்கு பாடப்புத்தகமும் பல ஆண்டுகளாகவே வழங்கப்படவில்லை. இதனால் உடற்கல்வியை ஒரு பாடப்பிரிவாகவே பல பள்ளிகளில் எடுத்துக் கொள்வதில்லை.
ஆனால் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் உடற்கல்விக்கு கேள்வித்தாள் கொடுத்து தேர்வு மட்டும் நடத்தப்படுகிறது. பாடப்புத்தகம் இல்லாமல், ஆசிரியர்கள் இல்லாமல் தேர்வு மட்டும் நடத்துவது எதற்கு என கல்வியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இதனால் மாணவர்கள் குழப்பம் அடையும் நிலையே உள்ளது. இதுகுறித்து உடற்கல்வி ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது, உடற்கல்வி பாடத்துக்கு முறையான பாடத்திட்டம் வகுத்து, பாடப்புத்தகங்களை உருவாக்கினால் மட்டுமே மாணவர்களுக்கு முறையான உடற்கல்வி பாடத்தை கற்றுக்கொடுப்பதாகும். உடற்கல்வி தொடர்பான அடிப்படை விபரங்கள் கூட தெரியாமல் மாணவர்கள் ஏமாற்றப்படுகின்றனர்.
பல ஆண்டுகளாகவே போதிய உடற்கல்வி ஆசிரியர்களை நியமித்து, உடற்கல்வி பாடப்புத்தகங்களை வழங்க வேண்டும் என்பது கோரிக்கையாகவே உள்ளது. தற்போதுள்ள அரசு நிறைவேற்ற முன்வர வேண்டும் என்றனர்.