/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
3 ஒன்றியங்களாக பிரிப்பு உடன் பிறப்புகள் 'குஷி'
/
3 ஒன்றியங்களாக பிரிப்பு உடன் பிறப்புகள் 'குஷி'
ADDED : மே 21, 2025 02:50 AM
வரும் 2026 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க ஆளுங்கட்சியான தி.மு.க., வில் கட்சி தலைமை பல அதிரடி வியூகங்களை வகுத்து வருகிறது.
குறிப்பாக, கட்சியை பலப்படுத்தவும், தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டவும் தமிழகம் முழுதும் புதியதாக பொறுப்பாளர்களை நியமித்து வருகிறது.
மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் இருந்த நியமனங்கள் தற்போது, ஒன்றிய அளவிலும் நியமிக்கப்பட உள்ளதாக தி.மு.க., வினர் மத்தியில் பரவலாக பேச்சு எழுந்துள்ளது. பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள 41 ஊராட்சிகளை உள்ளடக்கி கடந்த காலங்களில் ஒரே ஒரு ஒன்றிய செயலாளர் கட்டுப்பாட்டில் இருந்தது.
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் பரங்கிப்பேட்டை ஒன்றிய தி.மு.க., பரங்கிப்பேட்டை வடக்கு ஒன்றியம் மற்றும் பரங்கிப்பேட்டை தெற்கு ஒன்றியம் என, இரண்டாக பிரிக்கப்பட்டது.
இந்நிலையில் மூன்றாவதாக பரங்கிப்பேட்டை மத்திய ஒன்றியம் என தனியாக பிரிக்கப்பட உள்ளது.
பரங்கிப்பேட்டை மத்திய ஒன்றியத்திற்கு, சிதம்பரம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட புவனகிரி கிழக்கு ஒன்றியத்தில் உள்ள 7 ஊராட்சிகள் சேர்க்கப்பட உள்ளன.
ஏற்கனவே 41 ஊராட்சிகள் மற்றும் புவனகிரி கிழக்கு ஒன்றியத்தில் 7 ஊராட்சிகள் என மொத்தம் 48 ஊராட்சிகளை, மூன்று ஒன்றிய செயலாளர்களுக்கும் தலா 16 ஊராட்சிகள் வீதம் பிரிக்கப்படுகிறது.
இதனால் உடன் பிறப்புகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.