ADDED : பிப் 03, 2026 03:15 AM

வடலுார்: வடலுாரில் பாரம்பரிய அகில இந்திய சித்த வைத்தியர்கள் சங்கம் சார்பில், 48வது அகில இந்திய சித்த வைத்திய மாநாடு நடந்தது.
பொதுச் செயலாளர் கருணாமூர்த்தி தலைமை தாங்கினார். சங்கத் தலைவர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். பா.ஜ., மாநில செயலாளர் அஸ்வத்தாமன், பரம்பரை சித்த வைத்தியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஆர்.எஸ்.என்.பி., சான்றிதழை மீண்டும் வழங்குவது தொடர்பான மனு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது குறித்து பேசினார்.
தமிழ் சேவா சங்க நிறுவனர் ஞான சரவணன், இம்ப்காப்ஸ் தலைவர் கண்ணன், மிஷன் இந்தியா பொறுப்பாளர்கள் பிள்ளை, வாசுதேவன் ஆகியோர் பரம்பரை சித்த வைத்தியர்களுக்கு அரசு பதிவு வழங்க வேண்டும் என வலியுறுத்தி பேசினர்.
இளங்கோவன், ராஜசேகரன், ரவி, மரிசங்கரி, ராஜமோகன், தனசேகர், குமாரசெல்வன், அன்பழகன் உட்பட பலர் பங்கேற்றனர்.
