ADDED : செப் 14, 2026 04:41 PM
அ நிறம் | அளவு
நெல்லிக்குப்பம், செப்15–
சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
கடலூர் மாவட்ட அமெச்சூர் சிலம்பம் சங்கம் சார்பில் மாணவ மாணவிகளுக்கு பயிற்சி அளித்து போட்டிகள் நடத்தினர்.இதில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆர்.ஆர்.மெட்ரிக் பள்ளியில் பரிசளிப்பு விழா நடந்தது.தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.சங்க தலைவர் விஜயகுமார்,சந்திரசேகர் முன்னிலை வகித்தனர்.துணைத்தலைவர் ஆறுமுகம் வரவேற்றார்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுமணி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களையும்,கேடயத்தையும் வழங்கினார்.கவுரவ தலைவர் வித்யாபதி,தாஸ்,ராமதாஸ்,வேல்முருகன்,சிவகுருநாதன்,ராஜீவ்,ராஜா,துணை செயலாளர் தட்சிணாமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
