/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிலம்பம், கராத்தே பயிற்சி நிறைவு
/
சிலம்பம், கராத்தே பயிற்சி நிறைவு
ADDED : டிச 25, 2025 05:58 AM

ஸ்ரீமுஷ்ணம்: சமூக நீதி விடுதி மாணவிகளுக்கான தற்காப்பு கலை பயிற்சி நிறைவு நிகழ்ச்சி நடந்தது.
ஸ்ரீமுஷ்ணம் மலைமேடு எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் உள்ள சமூக நீதி விடுதி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி முகாம் நடந்தது.
இதில் விடுதியில் தங்கி பயிலும் மாணவிகள், 55 பேருக்கு சிலம்பம் மற்றும் கராத்தே உள்ளிட்ட தற்காப்பு பயிற்சி வழங்கப்பட்டது.
தொடர்ந்து முகாம் நிறைவு நிகழ்ச்சியில், ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சி சேர்மன் செல்விஆனந்தன், சப் இன்ஸ்பெக்டர் சந்திரா ஆகியோர் மாணவிகளை வாழ்த்தி பேசினர். இதில் விடுதி காப்பாளர் சுகுணா, சிலம்பம் பயிற்சி ஆசிரியர் சரோஜினி, கராத்தே பயிற்சியாளர் சென்சாய் சத்தியராஜ் மற்றும் மாணவ மாணவிகள் கலந்துக்கொண்டனர்.

