தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சிலம்பம் அரங்கேற்ற துவக்க விழா 

 சிலம்பம் அரங்கேற்ற துவக்க விழா 

 சிலம்பம் அரங்கேற்ற துவக்க விழா 


ADDED : ஏப் 18, 2026 03:35 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 18, 2026 03:35 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த ஆயிப்பேட்டை கிராமத்தில் நாகம் பதினாறு சிலம்பம் அரங்கேற்ற விழா நடந்தது.

கராத்தே பள்ளி நிறுவனர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். அரசு இசைப்பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேஷ், சென்னை ஐகோர்ட் வழக்கறிஞர் ராஜேந்திரபாபு, இளையராஜா, பாஸ்கர், ஆண்டவர், விமல்குமார், சடகோபன், சிலம்பம் பயிற்சியாளர்கள், கணபதி ஜலேந்திரன், சிகாமணி, ராஜாதுரை, ராஜாராமன், ரங்கநாதன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பயிற்சியாளர் வெங்கடேஸ்வரன் வரவேற்றார். பயிற்சியாளர்கள் வித்யாபதி, முத்து, சுப்ரமணியன் ஆகியோர் அரங்கேற்றத்தை துவக்கி வைத்தனர்.

பயிற்சியாளர்கள் ஞானபிரகாசம், கனகவேல், சைமன்ராஜ், ஜெசிந்தா, சுமதிசுப்ரமணியன், தங்கமணி, ராஜா, இளையராஜா ஆகியோர் வாழ்த்தி பேசினர். சிலம்பம் பயின்ற மாணவர்கள், பயிற்சியாளர்கள் பூஜை போட்டு அரங்கேற்றம் செய்து வழிபாடு செய்தனர்.

இதில், சிலம்பம் பயிற்சியாளர்கள் முத்து, புருேஷாத்தமன், ஆண்டனிமுத்து, நாராயணசாமி, சத்தியமூர்த்தி, வேல்முருகன், சிலம்பம் பயிற்சி மாணவர்கள், பெற்றோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மாணவர்களுக்கு பயிற்சியளித்த பயிற்சியாளர் ரகுநாத் நன்றி கூறினார்.

:

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us