ADDED : ஜன 08, 2026 06:07 AM

பண்ருட்டி: இலங்கையில் இந்தியர்கள் பங்கேற்ற சிலம்பாட்ட 3 நாள் பயிற்சி முகாம் நடந்தது.
இலங்கை சிலம்பாட்ட பெடரேஷன் நிறுவனர் திவாகரன் மற்றும் மலேசியா சிலம்பாட்டக் கழகம், கடலுார் மற்றும் கத்தார், நாகம் பதினாறு சிலம்பாட்டக் கழகம் இணைந்து இலங்கையில் திரிகோணமலை மற்றும் நுவரேலியா கோட்டகலாவில் பயிற்சிகள் அளித்தனர்.
திரிகோணமலை மேயர் செல்வரா ஜா பயிற்சியை துவக்கி வைத்தார். மலேசியா சிவக்குமார் ஆறுமுகம், விஜயசேகரன், பார்த்திபன் குழுவினர் குறவஞ்சி பயிற்சிகள் அளித்தனர்.
ராஜதுரை குப்புசாமி ஆசுச்சிலம்பக்கலை பயிற்சியையும், அந்தமான் வீரபாண்டியன் நாராயணன் , கத்தார் பிரகதீஷ் பாலமுருகன், கீர்த்திவர்ஷாகந்தன் ஆகியோர் நாகம் பதினாறு சிலம்பாட்டத்தையும் பயிற்சி அளித்தனர்.
முதல்நாள் பயிற்சியினை ஸ்ரீலங்கா அகரம் சிலம்பாடக் குழுவினர் செய்தனர். அடுத்தநாள் இராவணன் சிலம்பாட்டக் கழகத்தினரும் மற்றக் சிலம்பாட்டக் குழுவினரும் செய்தனர். நிறைவு நாள் பயிற்சிகளுக்கான ஏற்பாடுகளை நுவரேலியா சிலம்பாட்டக் கழகத்தினர் செய்தனர்.
கந்தசாமி பயிற்சிகளைத் துவக்கி வைத்தார். பயிற்சியாளர்கள் நாகம் பதினாறு முதன்மை ஆலோசகர் மதிவாணன் தலைமையில் சென்றனர்.
ஆசிரியர் பிரபு, மதிவாணன் ஒருங்கிணைப்பு ஏற்பாடுகளை செய்தார். 400க்கும் அதிகமான ஆசிரி யர்களும் மாணவர்களும் பயிற்சி பெற்றனர். பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள், கேடயங்கள் வழங்கினர்.
