sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கீழணை கட்டிய நீர்ப்பாசன தந்தை சர் ஆர்தர் காட்டன்

/

கீழணை கட்டிய நீர்ப்பாசன தந்தை சர் ஆர்தர் காட்டன்

கீழணை கட்டிய நீர்ப்பாசன தந்தை சர் ஆர்தர் காட்டன்

கீழணை கட்டிய நீர்ப்பாசன தந்தை சர் ஆர்தர் காட்டன்


ADDED : மே 14, 2025 01:02 AM

Google News

ADDED : மே 14, 2025 01:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தஞ்சை மாவட்டம், திருவிடைமருதுார் வட்டம், அணைக்கரை கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கீழணைகட்டப்பட்டுள்ளது. 185 ஆண்டுகள் பழமையும், பெருமையும் வாய்ந்த இந்த அணையை பிரிட்டிஷ் பொறியாளர் சர் ஆர்தர்காட்டன் என்பவர் கட்டினார்.

இவர் தனது வாழ்க்கை முழுவதையும் இந்தியாவில் நீர்ப்பாசன வசதி செய்து தரவும், கால்வாய்களை அமைப்பதற்காகவும் அர்ப்பணித்தார். இதனால் அவர் இந்திய நீர்ப்பாசனத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார்.

கடந்த 1829ம் ஆண்டு காவிரி பாசனப் பகுதிக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட சர் ஆர்தர் காட்டன், மணல்மேடுகளால் நீரோட்டம்தடைபட்டிருந்த கல்லணையில் மணல் போக்கிகளை அமைத்தார்.

அப்போது, கரிகால் சோழன் கட்டிய கல்லணையின்அடித்தளத்தைக் கண்டு வியந்து, 'ஆழம் காண முடியாத ஆற்று மணற்படுகையில் அடித்தளம் அமைக்கும் தொழில்நுட்பத்தைபண் டைய தமிழர்கள் வாயிலாக அறிந்து கொண்டேன்' என்றார். கல்லணைக்கு 'கிராண்ட் அணை கட்' என்ற பெயரைச்சூட்டினார்.

காவிரி ஆறு முக்கொம்பில் காவிரி, கொள்ளிடம் என இரண்டாக பிரிகிறது. கொள்ளிடம் ஆற்றுப் பகுதி தாழ்வாக இருப்பதால்,அங்கு நீர் அதிகமாக பாய்ந்து காவிரியில் உரிய நீர் வரத்து இல்லாமல் பாதிக்கப்பட்ட தஞ்சை மாவட்ட விவசாயிகளின் துயர்துடைப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளும் பொறுப்பை சர் ஆர்தர் காட்டனிடம் வழங்கியது ஆங்கிலேய அரசு.

இதையடுத்து, கல்லணையை முன்மாதிரியாகக் கொண்டு 1835-36ல் கொள்ளிடத்தின் குறுக்கே மேலணையைக் கட்டினார்.இதன் மூலம், காவிரி நீர் கொள்ளிடத்தில் செல்வது தடுக்கப்பட்டது. இதனை அடுத்து கொள்ளிடம் ஆற்றில் 1840ல் கும்பகோணத்திற்கு அருகில் அணைக்கரை எனும் இடத்தில் கீழணையை முழுமையாகக் கட்டினார். இதனால் தண்ணீர்வீணாகி கடலில் சென்று கலப்பதைத் தடுத்து வீராணம் ஏரிக்குக் சென்று அங்கு பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறுகின்றன.

கீழணை வெள்ள காலங்களில் 4.50லட்சம் கன அடி உச்சக்கட்ட வெள்ளநீர் வடிகாலாக பயன்படுகிறது.

கீழணை மூலம் கடலுார், தஞ்சை, நாகை மாவட்டங்கள் பாசனம் பெறுகின்றன. இதில், கடலுார் மாவட்டத்தில் காவிரி டெல்டா கடை மடை பகுதி விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். கீழணைபாசனத்துக்காக வடவாறு, வடக்குராஜன் வாய்க்கால், கவரப்பட்டு வாய்க்கால், வீராணம் ஏரி, கஞ்சங் கொல்லை வாய்க்கால்,கான்சாகிப் வாய்க்கால், தெற்குராஜன் வாய்க்கால், குமிக்கி மணியாறு, மேலராமன் வாய்க்கால் ஆகிய வாய்க்கால்கள் மூலம்1,26,839 ஏக்கர் பாசன பரப்புக்கு பயன்பட்டு வருகிறது.

கொள்ளிடம் ஆறு அணைக்கரையில் இரண்டாக பிரிந்து வடக்கு பிரிவு கொள்ளிட ஆறு, தெற்குப் பிரிவு கொள்ளிட ஆறுஎன அணைக்கரை என்ற கிராமத்தை தீவு போல் ஏற்படுத்தி, பின்னர் 5 கி.மீ. தூரத்தில் இரண்டும் சங்கமித்து பின் 33 மைல்கள்சென்று வங்கக்கடலில் கலக்கிறது. கீழணை உபகோட்ட அலுவலகம் மற்றும் கீழணைப் பாசன பொறியாளர் பிரிவு ஆகியஇரண்டு அலுவலகங்கள், சென்னை மண்டலத்தின் வெள்ளாறு வடிநில வட்டம், கடலுார், சிதம்பரம் கொள்ளிடம்வடிநிலை கோட்டம், பொதுப்பணித்துறை அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.






      Dinamalar
      Follow us