தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம்

ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம்

ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம்


ADDED : மார் 12, 2024 06:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 12, 2024 06:07 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருத்தாசலம், : விருத்தாசலம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், இந்திய குடியரசு கட்சி சார்பில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது.

விருத்தாசலம் அடுத்த ரூபநாராயணநல்லுார் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான 12 ஏக்கர் நத்தம் நிலத்தில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் 53 நபர்களுக்கு அரசு விதிமுறைகளை மீறி இலவச மனைப்பட்டா வழங்கப்பட்டன.

இதனை ரத்து செய்யக் கோரி, இந்திய குடியரசு கட்சி சார்பில் முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டது.

மாநில பொதுச் செயலாளர் மங்காபிள்ளை தலைமையில் பகல் 11:30 மணியளவில், பாலக்கரையில் இருந்து 50க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக ஆர்.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட சென்றனர். இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் அவர்களை தடுத்தி நிறுத்தினர்.

பின்னர், ஆர்.டி.ஓ.,விடம் மனு கொடுக்க சென்றபோது, அதிகாரிகள் யாரும் இல்லாததால், தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த தாசில்தார் உதயகுமார், பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, முறைகேடாக பட்டா வழங்கிய தாசில்தார் தனபதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பட்டாக்களை ரத்து செய்து, துறை ரீதியான விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் உறுதியளித்ததையேற்று, அனைவரும் கலைந்து சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us