sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 திறன் மேம்பாட்டு கருத்தரங்கம்

/

 திறன் மேம்பாட்டு கருத்தரங்கம்

 திறன் மேம்பாட்டு கருத்தரங்கம்

 திறன் மேம்பாட்டு கருத்தரங்கம்


ADDED : பிப் 14, 2026 03:47 AM

Google News

ADDED : பிப் 14, 2026 03:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெய்வேலி: நெய்வேலியில் மக்கள் சேவை இயக்கத்தின் சார்பில் 28ம் ஆண்டு மாணவ,மாணவிகளுக்கான திறன் காண் மேம்பாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது.

நெய்வேலியில் உள்ள பல்வேறு பள்ளிகளில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். என்.எல்.சி., முதன்மை பொது மேலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.

என்.எல்.சி., நிதித்துறை துணை பொது மேலாளர் சுமுகா மற்றும் என்.எல்.சி., பட்டதாரி பொறியாளர் சங்கத்தின் பொது செயலாளர் சிவ பிரசாத் முன்னிலை வகித்தனர்.

மாணவர்களின் முன்னேற்றத்திற்கு பெரிதும் காரணமாக இருப்பவர்கள் பெற்றோரா? கல்வி நிலையங்களா? சமூகம் மற்றும் ஊடகங்களா? சுய சிந்தனையும் ஒழுக்கமுமா? எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.

பள்ளி மாணவர்கள் பங்குபெற்ற விவாத கருத்தரங்கத்தை பி.எஸ்.ஜி., அமைப்பின் பயிற்சியாளர் தாமரைச்செல்வன் நடத்தினார்.

அரசுப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரண பொருட்கள் வழங்கப்பட்டன. கருத்தரங்கில் பங்குகொண்ட சிறந்த பள்ளிகளுக்கான விருதுகளும், மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் நினைவு பரிசுகளும் சிறப்பு விருந்தினர்களால் வழங்கப்பட்டன.






      Dinamalar
      Follow us