/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
எம்,ஆர்.கே., கல்லுாரியில் திறன் மேம்பாட்டு பயிற்சி
/
எம்,ஆர்.கே., கல்லுாரியில் திறன் மேம்பாட்டு பயிற்சி
எம்,ஆர்.கே., கல்லுாரியில் திறன் மேம்பாட்டு பயிற்சி
எம்,ஆர்.கே., கல்லுாரியில் திறன் மேம்பாட்டு பயிற்சி
ADDED : டிச 19, 2024 06:40 AM

சிதம்பரம்; காட்டுமன்னார்கோவில் எம்.ஆர்.கே., கல்லுாரியில் பேராசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது.
ஏ.டி.ஏ.எல்., சார்பில், நிலையான வளர்ச்சி மற்றும் சீர்மிகு நகரங்களின் பயன்பாடுகளில் பசுமை ஆற்றலின் பங்கு என்ற தலைப்பில் பயிற்சி முகாம் நடந்தது. கல்லுாரி வளாகத்தில் நடந்த துவக்க விழாவிற்கு கதிரவன் தலைமை தாங்கினார்.
கல்லுாரி முதல்வர் ஆனந்தவேலு வரவேற்றார். கல்லுாரி நிர்வாக அலுவலர் கோகுலகண்ணன், மேலாளர் விஸ்வநாத் முன்னிலை வகித்தனர்.
ஒருங்கிணைப்பாளர் நித்யா அறிமுகவுரையாற்றினார். சிறப்பு விருந்தினராக, ஐ.ஐ.டி., மெட்ராஸ் பேராசிரியர் சீனிவாச ரெட்டி பங்கேற்று, பேசினார். பல்வேறு கல்லுாரியின் பேராசிரியர்கள், முதுகலை ஆராய்ச்சி மாணவர்கள் 50 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
பேராசிரியர் சிவப்பிரியா நன்றி கூறினார்.