தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ அரசு பள்ளி மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

 அரசு பள்ளி மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

 அரசு பள்ளி மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி


ADDED : ஜன 31, 2026 07:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 31, 2026 07:06 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ், பள்ளி மாணவர்களுக்கு காளான் வளர்ப்பு, சிறு பண்ணை திறன் மேம்பாட்டு பயிற்சி, கடந்த 27ம் தேதி துவங்கியது.

இந்த பயிற்சி முகாம் 20 நாட்கள் நடக்கிறது. இந்த பயிற்சியை திட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜன் துவக்கி வைத்தார்.

விருத்தாசலம் அரசு மேல்நிலைப்பள்ளி, வேளாண் ஆசிரியர் அருள்மொழி, காளாண் வளர்ப்பு, சிறுபண்ணை குறித்து மாணவர்களுக்கு விளக்கி னார்.

ஆலடி அரசு மேல்நிலை பள்ளி ஆசிரியர் ரங்கநாதன் பயிற்சியின் முக்கியத்துவம், வேளாண் அறிவியல் நிலையத்தின் பங்கு குறித்து மாணவர்களுக்கு விளக்கினார்.

மங்கலம்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் பாபாஜி, வேளாண் அறிவியல் நிலையம், நான் முதல்வன் திட்டம் குறித்து மாணவர்களுக்கு விளக்கினார்.

ஜெயகுமார், காளாண் வளர்ப்பு முறை குறித்து மாணவர்களுக்கு விளக்கினார். மேலும் இந்த பயிற்சியில், காளாண் படுக்கை அமைக்கும் தொழில்நுட்பங்கள், காளாண் வித்து தாயாரிக்கும் முறை, அதில் ஏற்படும் நோய்கள் மற்றும் காளாண் மதிப்பு கூட்டுதல் அதில் உள்ள ஊட்டச்சத்துகள் மேலும் அதை சந்தைப்படுத்தும் முறைகள் மற்றும் சான்றிதழ் பெறும் முறைகள் குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட உள்ளது.

இதில், வேளாண் அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுநர்கள் கண்ணன், ஜெய்வேலு, கலைச்செல்வி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த பயிற்சியில், விருத்தாசலம், ஆலடி, மங்கலம்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us