ADDED : மார் 21, 2026 05:12 AM

அ நிறம் | அளவு
பண்ருட்டி: பண்ருட்டி அருகே, ரூ.85 ஆயிரத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பண்ருட்டி சட்டசபை தொகுதி தேர்தல் பறக்கும் படை அலுவலர் முருகானந்தம் தலைமை யில் போலீசார் ராஜசேகர், தீபா குழுவினர் நேற்று முன்தினம் இரவு, 7:20 மணிக்கு, வி.கே.டி.தேசிய நெடுஞ்சாலை அரசு சேமிப்பு கிடங்கு அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியே காரில் வந்த சீரங்குப்பம் சேர்ந்த சீனிவாசன்,46; என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த ரூ.85 ஆயிரத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இந்த பணம் பண்ருட்டி தாலுகா அலுவலகத்தில், தேர்தல் துணை தாசில்தார் தேவநாதனிடம் ஒப்படைக்கப்பட்டது.
