/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
'மாஜி' அமைச்சர் மீது அவதூறு; எஸ்.பி.,யிடம் அ.தி.மு.க., புகார்
/
'மாஜி' அமைச்சர் மீது அவதூறு; எஸ்.பி.,யிடம் அ.தி.மு.க., புகார்
'மாஜி' அமைச்சர் மீது அவதூறு; எஸ்.பி.,யிடம் அ.தி.மு.க., புகார்
'மாஜி' அமைச்சர் மீது அவதூறு; எஸ்.பி.,யிடம் அ.தி.மு.க., புகார்
ADDED : ஜன 09, 2024 07:36 AM

கடலுார்: சமூக வலைதளத்தில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சம்பத் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அக்கட்சியினர் எஸ்.பி.,யிடம் மனு அளித்தனர்.
இது குறித்து கடலுார் எஸ்.பி., ராஜாராமிடம், வடக்கு மாவட்ட அ.தி.மு.க., அவைத் தலைவர் குமார் தலைமையில் நிர்வாகிகள் அளித்துள்ள மனு:
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர், கடலுார் வடக்கு மாவட்ட செயலாளர் சம்பத் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், சமூக வலைதளமான வாட்ஸ் ஆப்பில் தவறான கருத்துகளை சிலர் பதிவு செய்கின்றனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
முன்னாள் கவுன்சிலர் கந்தன், தொழில்நுட்ப பிரிவு பிரித்வி, மாவட்ட பிரதிநிதி தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.