/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
புகையில்லா போகி விழிப்புணர்வு பிரசாரம்
/
புகையில்லா போகி விழிப்புணர்வு பிரசாரம்
ADDED : ஜன 14, 2024 04:25 AM

பண்ருட்டி : பண்ருட்டி எக்ஸ்னோரா சங்கம் சார்பில் புகையில்லா போகி பண்டிகை கொண்டாட விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வழங்கப்பட்டது.
பண்ருட்டி எக்ஸ்னோரா சங்கம் சார்பில் போகி பண்டிகையில் பிளாஸ்டிக், டயர், டியூப்களை தீயிட்டு எரிக்கக்கூடாது என வலியுறுத்தி, நான்குமுனை சந்திப்பில் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு எக்ஸ்னோரா தலைவர் பசுபதி தலைமை தாங்கினார். தி.மு.க., கவுன்சிலர் கதிர்காமன், சண்முகவள்ளி பழனி, ஆசிரியர் லோகநாதன் முன்னிலை வகித்தனர்.
நகராட்சி சேர்மன் ராஜேந்திரன் துண்டு பிரசுரத்தை வழங்கி பிரசாரத்தை துவக்கி வைத்தார். இதில் திருவதிகை எக்ஸ்னோரா கிளப் பாலசந்தர், சுப்ராயன், நாராயணசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

