/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கூழாங்கற்கள் கடத்தல்; டிப்பர் லாரி பறிமுதல்
/
கூழாங்கற்கள் கடத்தல்; டிப்பர் லாரி பறிமுதல்
ADDED : பிப் 05, 2025 10:23 PM
விருத்தாசலம்; கூழாங்கற்கள் கடத்தி வந்த டிப்பர் லாரியை எஸ்.பி., தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கடலுார் எஸ்.பி., ஜெயக்குமார் உத்தரவின்படி, சிறப்பு தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார், விருத்தாசலம் - ஆலடி சாலையில் நேற்று சோதனை மேற்கொண்டனர். அப்போது, அவ்வழியே வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்ததில், 3 யூனிட் கூழாங்கற்கள் அரசு அனுமதியின்றி ஏற்றி வந்தது தெரிந்தது.
லாரி டிரைவர் தப்பியோடியதால், ஆலடி போலீஸ் ஸ்டேஷனில் டிப்பர் லாரியை தனிப்படை போலீசார் ஒப்படைத்தனர். இது குறித்து டிப்பர் லாரி உரிமையாளர் நடியப்பட்டு கணேசன் மகன் சங்கர், டிரைவர் நடியப்பட்டு காலனியை சேர்ந்த அரிகிருஷ்ணன் மகன் குமார் ஆகியோர் மீது ஆலடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.