/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆய்வகத்தில் புகுந்த பாம்பு விருதை பள்ளியில் பரபரப்பு
/
ஆய்வகத்தில் புகுந்த பாம்பு விருதை பள்ளியில் பரபரப்பு
ஆய்வகத்தில் புகுந்த பாம்பு விருதை பள்ளியில் பரபரப்பு
ஆய்வகத்தில் புகுந்த பாம்பு விருதை பள்ளியில் பரபரப்பு
ADDED : செப் 26, 2025 05:00 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் ஆண்கள் பள்ளி ஆய்வகத்திற்குள் ஐந்தரை அடி நீள சாரைப்பாம்பு புகுந்ததால் பரபரப்பு நிலவியது.
விருத்தாசலம், கடலுார் சாலையில் நுாற்றாண்டுகள் கடந்த அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. நேற்று காலை 11:00 மணிக்கு பள்ளி வளாகத்தில் உள்ள அறிவியல் ஆய்வகத்திற்குள் பாம்பு புகுந்தது.
இதனை பார்த்த மாணவர்கள் அதிர்ச்சியடைந்து, ஆசிரியர்களிடம் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், விருத்தாசலம் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) பன்னீர்செல்வம் தலைமையிலான வீரர்கள் விரைந்து சென்று, ஆய்வகத்திற்குள் பயன்படாத பொருட்கள் கிடந்த பகுதியில் பதுங்கியிருந்த பாம்பை பிடிக்க முயன்றனர். 30 நிமிட போராட்டத்திற்கு பிறகு, ஐந்தரை அடி நீள சாரைப்பாம்பை பாதுகாப்பாக பிடித்து, அருகிலுள்ள கருவேப்பிலங்குறிச்சி அரசு காப்புக்காட்டில் விட்டனர்.
பள்ளி வளாகத்திற்குள் பாம்பு புகுந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
பள்ளி வளாகத்திற்குள் முட்புதர்கள் மண்டிக் கிடப்பதால் விஷ ஜந்துக்கள் பெருக்கம் அதிகமாக உள்ளது.
எனவே, மாணவர்கள் நலன் கருதி முட்புதர்களை அகற்றிட பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.