ADDED : மார் 19, 2025 09:39 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம் ; பெண்ணாடத்தில் வீட்டிற்குள் புகுந்த 5 அடி நீளமுள்ள சாரை பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்து காப்புக் காட்டில் விட்டனர்.
பெண்ணாடம், கிழக்கு வாள்பட்டறை பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது வீட்டில் நேற்று காலை 5 அடி நீள சாரை பாம்பு புகுந்தது.
இதைக்கண்டு வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியே ஓடினர். தகவலறிந்த திட்டக்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் சண்முகம் தலைமையிலான வீரர்கள் வந்து, பாம்பை மீட்டு காப்புக் காட்டில் விட்டனர்.