ADDED : ஏப் 12, 2025 02:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம், செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது வீட்டில் நேற்று மாலை 4:00 மணிக்கு, பாம்பு புகுந்தது.
தகவலறிந்த விருத்தாசலம் தீயணைப்பு நிலைய அலுவலர் சங்கர் தலைமையிலான வீரர்கள் வந்து, வீட்டிற்குள் பதுங்கிய 7 அடி நீள சாரைப்பாம்பை, 3 மணி நேரம் போராடி, இரவு 7:00 மணிக்கு பிடித்தனர். பின், அதனை பாதுகாப்பாக அரசு காப்புக்காட்டில் விட்டனர்.