/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அரசு மருத்துவமனைக்கு சோப்பு, பேஸ்ட் வழங்கல்
/
அரசு மருத்துவமனைக்கு சோப்பு, பேஸ்ட் வழங்கல்
ADDED : ஏப் 19, 2025 06:33 AM

விருத்தாசலம்; விருத்தாசலம் அரசு மருத்துவமனை உள்நோயாளிகளுக்கு, ரோட்டரி சங்கம் சார்பில் சோப்பு, பேஸ்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
விருத்தாசலம் அரசு பொது மருத்துவமனையில் தினசரி 1,000க்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாகவும்; பொது, மகப்பேறு, முடநீக்கியல் உள்ளிட்ட பிரிவுகளில் 200க்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாக தங்கி, சிகிச்சை பெறுகின்றனர்.
அதில், உள் நோயாளிகளை சுகாதாரமாக பராமரிக்கும் வகையில் சோப்பு, டூத்பேஸ்ட் உள்ளிட்ட சுகாதார பராமரிப்பு பொருட்கள் வழங்கப்பட்டன.
தலைமை மருத்துவர் சாமிநாதன் தலைமை தாங்கினார். ரோட்டரி சங்கத் தலைவர் அசோக்குமார், பொருளாளர் பிரசன்னா, உறுப்பினர் வள்ளிநாயகம் உட்பட மருத்துவர்கள், செவிலியர்கள் உடனிருந்தனர்.
அப்போது, மூன்று மாதங்களுக்கு உள் நோயாளிகளுக்கு சோப்பு, டூத் பேஸ்ட் உள்ளிட்ட பொருட்கள் வழங்குவதாக ரோட்டரி நிர்வாகிகள் உறுதியளித்தனர்.