ADDED : டிச 06, 2024 07:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார் அடுத்த வெள்ளக்கரை கிராமத் தில், உலக மண் தின விழா நடந்தது.
கடலுார் வேளாண் உதவி இயக்குனர் (தரக் கட்டுப்பாடு) நடன சபா பதி, தலைமை தாங்கினார்.
விழாவில் மண்ணை பராமரிப்பது, அளவிடு தல், கண்காணித்தல், நிர்வகித்தல் கோட்பாடு விளக்கப்பட்டது.
மண் பரிசோதனை செய்து, அளிக்கப்படும் உரப்பரிந்துரை அடிப்படையில் சரியான விகிதத்தில் உரங்கள், உயிர் உரங்கள் மற்றும் பசுந்தாள் உரப்பயிர்களை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது.
விழாவில் ஒன்றியசெயலாளர் சுப்ரமணியன், மணி பரிசோதனை நிலைய வேளாண் அலுவலர் மாலினி, வட்டார தொழில் நுட்ப மேலாளர் அழகுமதி, உதவி தொழில்நுட்ப மேலாளர் தேவி, உதவி வேளாண்அலுவலர்கள் சங்கர்தாஸ், ராதை மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.