/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
35 அடி ஆழத்திற்கு மண் எடுப்பு; நிலத்தடி நீர் பாதிக்கும் அபாயம்
/
35 அடி ஆழத்திற்கு மண் எடுப்பு; நிலத்தடி நீர் பாதிக்கும் அபாயம்
35 அடி ஆழத்திற்கு மண் எடுப்பு; நிலத்தடி நீர் பாதிக்கும் அபாயம்
35 அடி ஆழத்திற்கு மண் எடுப்பு; நிலத்தடி நீர் பாதிக்கும் அபாயம்
ADDED : ஏப் 15, 2025 06:28 AM

கடலுார்; புதுச்சத்திரம் அருகே தனியார் சவுடு குவாரியில் அதிகளவு மண் எடுத்ததால் நிலத்தடி நீர் வற்றி விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
புதுச்சத்திரம் அருகே சிலம்பிமங்கலம் கிராமத்தில் தனியார் குவாரிகள் செயல்பட்டு வருகிறது. பெண்ணையாற்றில் மணல் குவாரிகள் இயங்காததால் பொதும க்கள் வீடுகளுக்கு கட்டுமானப்பணிக்கு பயன்படுத்தவும், மனைப்பிரிவுகளில் பள்ளமான மனையை சவுடு மண் கொண்டு நிரப்பவும் மண் தேவைப்படுகிறது.
அதில் புதுச்சத்திரம் பகுதியில் உள்ள மணற்பாங்கான நிலத்தில் 40 அடி ஆழம் வரை வெறும் மணல் பகுதியாகவே உள்ளது.
இதனால் சவுடு மண் விற்பனைக்கு உகந்ததாக கருதி சிலர் தனியார் குவாரி நடத்தி வருகின்றனர். தனியார் குவாரிகளில் 6 அடி அளவுதான் மண் எடுக்க வேண்டும். ஆனால் தனியார் குவாரிக்காரர்கள் விதிமுறைமீறி 35 அடி ஆழம் வரை மண் எடுக்கின்றனர். இதனால் கிடுகிடு பள்ளம் ஏற்பட்டுள்ளது.
அத்துடன் இப்பகுதி மணற்பாங்கான இடம் என்பதால் 25 அடியில் ஊறும் தண்ணீரை வைத்து எளிய முறையில் விவசாயம்செய்து வருகின்றனர். இதுபோன்ற பள்ளங்களினால் நிலத்தடிநீர் முழுவதும் வற்றிவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கனிம வள அதிகாரிகள் இதை கண்டு கொள்வதே இல்லை.