/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சோலைவாழி மாரியம்மன் கோவிலில் போகி பண்டிகை
/
சோலைவாழி மாரியம்மன் கோவிலில் போகி பண்டிகை
ADDED : ஜன 15, 2024 06:30 AM

கடலுார் : கடலுார், திருப்பாதிரிப்புலியூர் வெள்ளிமேட்டான் தெரு சோலை வாழிமாரியம்மன் கோவிலில் போகி பண்டிகை விழா கொண்டாடப்பட்டது.
விழாவையொட்டி, நேற்று காலை 7:00 மணிக்கு ஆற்றங்கரையில் இருந்து அம்மனுக்கு புனித நீர் கலசம் எடுத்து வருதல், காலை 11:00 மணிக்கு சாகை வார்த்தல் நடந்தது.
தொடர்ந்து, இரவு கும்பம் கொட்டுதல், மின் புஷ்ப அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நடந்தது.
சோலை வாழிமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து, இன்று தை பொங்கலை முன்னிட்டு காலை அம்மனுக்கு அபி ேஷக ஆராதனை நடக்கிறது.
ஏற்பாடுகளை விழாக் குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.