சூரிய வீடு மின்சார திட்டம்: அதிகாரிகள் விழிப்புணர்வு
சூரிய வீடு மின்சார திட்டம்: அதிகாரிகள் விழிப்புணர்வு
UPDATED : அக் 15, 2026 04:51 PM
ADDED : அக் 15, 2026 04:40 PM

அ நிறம் | அளவு
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பில் பிரதம மந்திரி சூரிய வீடு மின்சார திட்டத்தை வலியுறுத்தி மின்துறை அதிகாரிகள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு தண்டு பிரசுரங்கள் வழங்கினர்.
உதவி செயற்பொறியாளர் வேல்முருகன் தலைமை தாங்கி பிரதம மந்திரி வீடு திட்டத்தில், வீடுகளுக்கு மானியத்தில் சூரிய மின் வசதி பெறுவது குறித்து பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.பேரூராட்சி தலைவர் குலோத்தங்கன், உதவி மின் பொறியாளர் பிரபாகரன், போர்மன் அறிவழகன், வணிக உதவியாளர் அருள்முருகன், ஒயர்மேன் மாயகிருஷ்ணன், நீதி தேவன் முன்னிலை வகித்தனர்.
மின் துறையினர், புதிதாக வீடுகளுக்கு சோலார் மின் இணைப்பை மானிய திட்டத்தில் அமைக்க வலியுறுத்தி துண்டு பிரசுரம் வழங்கினர்.
