ADDED : பிப் 26, 2024 11:25 PM

நெய்வேலி : நெய்வேலி அருகே மாயான பாதை அமைக்கும் பணியை சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
நெய்வேலி அருகே மேல்வடக்குத்து கிராமத்தில் வசித்துவரும் பட்டியலின மக்கள் இறந்தால், உடல் அடக்கம் செய்ய 1 கி.மீ., துாரம் விளை நிலங்கள் வழியாக செல்ல வேண்டியிருந்தது. இதனால், பாதை கேட்டு எம்.எல்.ஏ., விடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். சம்பந்தபட்ட துறை அதிகாரிகள், நில உரிமையாளர்களிடம் பேசி அவர்களது நிலத்தை பேசி, நிலம் வழங்கிய உரிமையாளர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டது.
இதைடுத்து மேல்வடக்குத்து கிராமத்தில் புதிய மயான பாதை அமைக்கும் பணியை சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். மயான பாதைக்கு நிலம் வழங்கிய 11 உரிமையாளருக்கு எம்.எல்.ஏ., நன்றி தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், தி.மு.க., குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய தலைவர் வீரராமச்சந்திரன், செயலாளர் குணசேகரன், வடக்குத்து ஊராட்சி தலைவர் அஞ்சலை குப்புசாமி, துணைத் தலைவர் சடையப்பன், வி.ஏ.ஓ., விஸ்வநாதன், ஊராட்சி செயலர் கார்த்திக் மற்றும் வார்டு உறுப்பினனர்கள் கலந்து கொண்டனர்.
