ADDED : ஜூலை 04, 2026 04:52 AM
அ நிறம் | அளவு
பண்ருட்டி: தாய் திட்டியதால் வாலிபர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பண்ருட்டி அடுத்த அங்குசெட்டிப்பாளையம், திரவுபதியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவரது மகன் அகிலன்,29; ஏ.சி., மெக்கானிக். இவர் தினமும் வேலைக்கு சென்று பணத்தை வீட்டில் கொடுக்காமல் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு மது குடித்து வந்ததால் அவரது தாயார் திட்டி வந்தார்.
இந்நிலையில் வேலைக்கு சென்று நேற்று மாலை வீட்டிற்கு வந்த அகிலன் வீட்டில் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொ ண்டார். இதுகுறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.
