தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சொரத்துார் ராஜேந்திரன் ஆவேசம் 

 சொரத்துார் ராஜேந்திரன் ஆவேசம் 

 சொரத்துார் ராஜேந்திரன் ஆவேசம் 


ADDED : ஏப் 07, 2026 07:18 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 07, 2026 07:18 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார்: நெய்வேலி சட்டசபை தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் சொரத்துார் ராஜேந்திரன் பண்ருட்டி தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பத்திரக்கோட்டை பகுதிகளில் ஓட்டு சேகரித்தார்.

அப்பொழுது அவர் பேசியதாவது:

கடந்த 5 ஆண்டு கால தி.மு.க., ஆட்சியில் மக்களுக்கு நலத்திட்டங்கள் ஏதும் வழங்கப்படவில்லை. ரூ. 6 லட்சம் கோடி கடன் வாங்கி கொள்ளையடித்து வைத்திருக்கின்றனர். அந்த பணத்தை வைத்து தான் இப்பொழுது சட்டசபை தேர்தலை சந்திக்க வருகின்றனர்.

தி.மு.க.,வினர் ஓட்டு கேட்க வரும் போது அ.தி.மு.க., ஆட்சியில் வழங்கப்பட்ட தாலிக்கு தங்கம், விலை இல்லா கறவை மாடு, ஆடு, கோழி மற்றும் பெண்களுக்கு மானிய விலையில் வழங்கப்பட்ட இருசக்கர வாகனத் திட்டம் உள்ளிட்டவற்றை ஏன் நிறுத்தினீர்கள் எனக்கேட்டு விரட்டுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில், மாநில ஜெ., பேரவை துணை செயலாளர்கள் சிவசுப்பிரமணியன், பக்தரட்சகன், மாவட்ட ஜெ.,பேரவை செயலாளர் ராஜசேகர், விழுப்புரம் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் ராதாகிருஷ்ணன், பண்ருட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கமலக்கண்ணன், குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ், மாவட்ட துணை செயலாளர் ஞான செல்வி கல்யாண சுந்தரம், மாவட்ட பொருளாளர் தேவநாதன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் சுப்பிரமணியன், எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் தங்கப்பன், இணை செயலாளர் பெருமாள், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் திருமலைவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us