மக்களின் பிரச்னைக்கு தீர்வு :சொரத்துார் ராஜேந்திரன் உறுதி
மக்களின் பிரச்னைக்கு தீர்வு :சொரத்துார் ராஜேந்திரன் உறுதி
ADDED : ஏப் 19, 2026 11:06 PM

கடலுார்: நெய்வேலி அ.தி.மு.க., வேட்பாளர் சொரத்துார் ராஜேந்திரன் டவுன்ஷிப்பில் வீதி வீதியாக ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தேசிய ஜனநாயக் கூட்டணி சார்பில் நெய்வேலி தொகுதியில் அ.தி.மு.க., வேட்பாளர் சொரத்துார் ராஜேந்திரன் போட்டியிடுகிறார். இவர், தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பம்பரமாக சுழன்று பிரசாரம் செய்து வருகிறார். நேற்று காலை நெய்வேலி டவுன்ஷிப் முழுவதும் உள்ள வீடுகளில் இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்.
அப்போது அவர் பேசுகையில், 'நெய்வேலி பகுதியில் எந்த பிரச்னையாக இருந்தாலும் உடனடியாக முடிந்த வரை தீர்வு காணப்படும். கடந்த கால ஆட்சியில் சில பிரச்னைகள் ஏற்பட்டிருக்கலாம். அ.தி.மு.க., ஆட்சி மீண்டும் வந்ததும் மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும். இப்பகுதியிலேயே இருக்கும் என்னை வெற்றி பெற செய்ய வேண்டும்' என்றார். முன்னாள் எம்.எல்.ஏ., சிவசுப்ரமணியன், நகர செயலாளர் கோவிந்தராஜ், தொகுதி பொறுப்பாளர் கமலக்கண்ணன், திருமலைவாசன், ஒன்றிய இணை செயலாளர் மணிகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
