ADDED : ஏப் 17, 2026 11:35 PM

அ நிறம் | அளவு
கடலுார்: நெய்வேலியில் அ.தி.மு.க., வேட்பாளர் சொரத்துார் ராஜேந்திரன் ஓட்டு சேகரித்தார்.
கடலுார் மாவட்டம், நெய்வேலி தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சொரத்துார் ராஜேந்திரன் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
நேற்று அவர் நெய்வேலி பகுதியில் உள்ள வட்டம் 21 மற்றும் 30,ல், வீடு வீடாக ஆதரவு திரட்டினார். அப்போது முன்னாள் எம்.எல்.ஏ., சிவசுப்ரமணியன், தேர்தல் பொறுப்பாளர் கமலக்கண்ணன், நெய்வேலி கோவிந்தராஜ், அண்ணா தொழிற்சங்க செயலாளர் வெற்றிவேல் உள்ளிட்ட பலர் உடன் சென்றனர்.
