ADDED : ஜன 30, 2026 06:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் பகுதியில் உளுந்து அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
விருத்தாசலம் அடுத்த எடைச்சித்துார், காட்டுப்பரூர், சிறுவம்பார், கர்னத்தம், சின்னவடவாடி, பெரியவடவாடி, விஜயமாநகரம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராம விவசாயி கள் போர்வெல், கிணறு பாசனம் மற்றும் மானாவாரியாக ஆண்டுதோறும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் உளுந்து சாகுபடி செய்வது வழக்கம்.
அதேபோல் கடந்தாண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் விவசாயிகள் உளுந்து சாகுபடி செய்திருந்தனர்.
இந்நிலையில் செடிகள் நன்கு வளர்ந்து முற்றிய நிலையில், தற்போது உ ளுந்து செடிகளை அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

