/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நெல்லிக்குப்பத்தில் எஸ்.பி., ஆய்வு
/
நெல்லிக்குப்பத்தில் எஸ்.பி., ஆய்வு
ADDED : டிச 26, 2024 07:17 AM

நெல்லிக்குப்பம் :   நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் நேற்று எஸ்.பி., ராஜாராம் ஆய்வு செய்தார்.
போலீஸ் நிலையத்தில் கைதிகள் அறை, துப்பாக்கிகள் பாதுகாப்பு அறை ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, போலீஸ் நிலையத்துக்கு புகார் கொடுக்க வருபவர்களிடம் அன்பாக நடந்து கொள்ள வேண்டும்.
தேவையில்லாமல் அலைகழிக்க வைக்க கூடாது. அவர்கள் பிரச்னைகளுக்கு விரைவாக தீர்வு காண வேண்டும். நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும். கோர்ட்டில் ஆஜர் ஆகாமல் உள்ள குற்றவாளிகளை பிடித்து ஆஜர்படுத்த வேண்டும். சட்டவிரோத சாராயம், கஞ்சா போன்றவற்றின் விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும். என, அறிவுரை வழங்கினார். இன்ஸ்பெக்டர் ரவிச்ந்திரன், சப் இன்ஸ்பெக்டர் ஜவ்வாது உசேன் உடனிருந்தனர்.

