/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தீபாவளி பாதுகாப்பு ஏற்பாடு சிதம்பரத்தில் எஸ்.பி., ஆய்வு
/
தீபாவளி பாதுகாப்பு ஏற்பாடு சிதம்பரத்தில் எஸ்.பி., ஆய்வு
தீபாவளி பாதுகாப்பு ஏற்பாடு சிதம்பரத்தில் எஸ்.பி., ஆய்வு
தீபாவளி பாதுகாப்பு ஏற்பாடு சிதம்பரத்தில் எஸ்.பி., ஆய்வு
ADDED : அக் 12, 2025 06:36 AM

சிதம்பரம் : சிதம்பரத்தில் தீபாவளி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எஸ்.பி., ஆய்வு செய்தார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சிதம்பரம் மேலவீதியில் பொதுமக்களின் கூட்ட நெரிசலை ஒழுங்குப்படுத்தவும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் எஸ்.பி., ஜெயக்குமார் ஆய்வு செய்தார். தொடர்ந்து, கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கும் இடம், சாலையோர கடைகள் அமைக்கும் பகுதிகளில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது குறித்து போலீசாருக்கு ஆலோசனை வழங்கினார்.
டி.எஸ்.பி., பிரதீப், இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.
விருத்தாசலம் விருத்தாசலம் உட்கோட்ட தலைமையிடமாக இருப்பதால் சுற்றியுள்ள நுாற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் அன்றாட தேவைக்கு விருத்தாசலம் செல்கின்றனர். தீபாவளி பண்டிகையையொட்டி, பொருட்கள் வாங்க வரும் பொது மக்களுக்கு போதை ஆசாமிகளால் அச்சுறுத்தல் ஏ ற்படுவதை தவிர்க்கும் வகையில் நேற்று காலை போலீசாரின் அணிவகுப்பு நடந்தது.
இந்நிலையில், விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து ஸ்டேட் பாங்க் பஸ் நிறுத்தம், பாலக்கரை, கடைவீதி, பஸ் நிலையம் பகுதிகளில் அணிவகுப்பு நடந்தது. இதில், டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் என ஐம்பதுக்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்றனர்.