/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தைப்பூச பாதுகாப்பு ஏற்பாடுகள் வடலுாரில் எஸ்.பி., ஆய்வு
/
தைப்பூச பாதுகாப்பு ஏற்பாடுகள் வடலுாரில் எஸ்.பி., ஆய்வு
தைப்பூச பாதுகாப்பு ஏற்பாடுகள் வடலுாரில் எஸ்.பி., ஆய்வு
தைப்பூச பாதுகாப்பு ஏற்பாடுகள் வடலுாரில் எஸ்.பி., ஆய்வு
ADDED : ஜன 08, 2025 05:29 AM

கடலுார்: வடலுார் சத்திய ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசன விழாவையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எஸ்.பி.,ஜெயக்குமார் ஆய்வு மேற்கொண்டார்.
வடலுார் சத்தியஞான சபையில் பிப்., 11ம் தேதி தைப்பூச ஜோதி தரிசன பெருவிழா நடக்கிறது. உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருவர். சத்திய ஞானசபை மற்றும் வடலுார் நகராட்சி சார்பில் ஏற்பாடுகள் நடக்கிறது.
விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எஸ்.பி.,ஜெயக்குமார் நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டார்.
சத்தியஞான சபை, தர்ம சாலை, அணையா அடுப்பு உள்ளிட்டவைற்றை பார்வையிட்டு, அறநிலையத்துறை அதிகாரிகளுடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசித்தார்.
நெய்வேலி டி.எஸ்.பி., சபியுல்லா, வடலுார் இன்ஸ்பெக்டர் உதயகுமார், அறநிலையத்துறை கடலுார் உதவி ஆணையர் சந்திரன், செயல்அலுவலர் ராஜா சரவணகுமார் மற்றும் அறங்காவலர் குழு தலைவர், உறுப்பினர்கள் உடனிருந்தனர்.