விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் :எஸ்.பி., ஜெயக்குமார் அறிவுரை
விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் :எஸ்.பி., ஜெயக்குமார் அறிவுரை
ADDED : ஏப் 22, 2026 08:23 PM

பரங்கிப்பேட்டை: தேர்தல் விதிமுறைகளின் படி, போலீசார் பணியாற்ற வேண்டும் என எஸ்.பி., ஜெயக்குமார் அறிவுரை வழங்கினார்.
புவனகிரி சட்டசபை தொகுதியில் தேர்தலையொட்டி, பாதுகாப்பு பணியில், டி.எஸ்.பி., தலைமையில், ஒரு இன்ஸ்பெக்டர், 27 சப் இன்ஸ்பெக்டர்கள், 170 போலீசார் என மொத்தம், 304 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தேர்தல் பாதுகாப்பு பணிக்கு புவனகிரி தாலுாகா அலுவலகத்திற்கு, வந்திருந்த போலீசாரிடம்,எஸ்.பி., ஜெயக்குமார் கூறியதாவது:
ஓட்டுப்பதிவின்போது போலீசார் தேர்தல் விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். ஓட்டுச்சாவடி அலுவலர் அழைத்தால் மட்டுமே ஓட்டுப்பதிவு மையத்திற்கு செல்ல வேண்டும்.
100 மீ., வரை எந்த வாகனங்களையும் அனுமதிக்கக்கூடாது. எந்த கட்சிக்கும் சார்பாக இருக்கக்கூடாது. மக்கள் அமைதியாக வந்து, ஓட்டுப்போட்டு அமைதியாக செல்ல, பாதுகாப்பு பணியில் போலீசார் கவனமாக இருக்க வேண்டும் என்றார்.
இவ்வாறு, எஸ்.பி., ஜெயக்குமார் கூறினார்.
