தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சிங்கப்பெண் அதிரடிப்படை ரோந்து பணி: எஸ்.பி., துவக்கி வைப்பு 

சிங்கப்பெண் அதிரடிப்படை ரோந்து பணி: எஸ்.பி., துவக்கி வைப்பு 

சிங்கப்பெண் அதிரடிப்படை ரோந்து பணி: எஸ்.பி., துவக்கி வைப்பு 


UPDATED : ஜூன் 10, 2026 06:23 PM

ADDED : ஜூன் 10, 2026 06:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 10, 2026 06:23 PM ADDED : ஜூன் 10, 2026 06:22 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க சிங்கப்பெண் அதிரடிப்படையினர் ரோந்து பணியை துவக்கினர்.

குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க சிங்கப்பெண் அதிரடிப்படையை முதல்வர் விஜய் நேற்று முன்தினம் சென்னையில் துவக்கி வைத்தார்.

தொடர்ந்து நேற்று கடலுார் மாவட்டத்தில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர் தங்கள் ரோந்துப்பணியை துவக்கினர்.

மாவட்ட எஸ்.பி.,ஜெயக்குமார், சிங்கப்பெண் ரோந்து வாகனத்தை ஓட்டி துவக்கி வைத்தார். கடலுார் மாவட்டத்தில் சப்இன்ஸ்பெக்டர் லிடியாசெல்வி, உத்தராம்பாள் தலைமையில், 4 பெண் காவலர்கள்,ஓட்டுனர்கள் உட்பட, 6 பேர் சிங்கப்பெண் அதிரடிப்படையில் இடம்பெற்றுள்ளனர்.

சுழற்சிமுறையில் ரோந்து பணியை மேற்கொள்வர். ஏ.டி.எஸ்.பி.,க்கள் கோடீஸ்வரன், ரகுபதி மற்றும் டி.எஸ்.பி.,க்கள் உடனிருந்தனர்.

மேலும் பஸ்நிலையங்களில், ரயில்நிலையங்கள், கல்வி நிலையங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் கண்காணிப்பு மற்றும் தங்கள் இருப்பை மேம்படுத்தி குற்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்கவும், குற்ற சம்பவங்கள் நிகழ வாய்ப்புள்ள இடங்களை கண்டறிந்து கண்காணிப்பதோடு பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்கவும், சட்ட விரோத செயல்களை தடுக்கவும், பாதிக்கப்பட்ட பெண்களை மீட்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us