/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
திருநங்கைகளுக்கான சிறப்பு ஆதார் முகாம்
/
திருநங்கைகளுக்கான சிறப்பு ஆதார் முகாம்
ADDED : ஜூலை 02, 2025 07:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : சிதம்பரம் அடுத்த லால்புரம் ஊராட்சியில், திருநங்கைகளுக்கான சிறப்பு ஆதார் முகாம் இந்திய அஞ்சல்துறை சார்பில் நடந்தது.
திருச்சி மண்டல அஞ்சல்துறை தலைவர் நிர்மலாதேவி, முகாமை துவக்கி வைத்தார். உள்ளூர் திருநங்கைகளுக்கான நடத்தப்பட்ட இந்த முகாமில் ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் பணிகள் நடந்தது.
முகாமில் 63க்கும் மேற்பட்ட திருநங்கைகளுக்கு ஆதாரில் பாலினம் மாற்றப்பட்டது. மேலும் 150க்கும் மேற்பட்டோரிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால் ஆதார் திருத்தம் செய்ய இயலவில்லை.
முகாமில் முன்னாள் ஊராட்சிதலைவர் மற்றும் அஞ்சலக அதிகாரிகள் உடனிருந்தனர்.