/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வள்ளிவிலாஸ் ஜூவல்லரியில் அட்சய திருதியை சிறப்பு விற்பனை
/
வள்ளிவிலாஸ் ஜூவல்லரியில் அட்சய திருதியை சிறப்பு விற்பனை
வள்ளிவிலாஸ் ஜூவல்லரியில் அட்சய திருதியை சிறப்பு விற்பனை
வள்ளிவிலாஸ் ஜூவல்லரியில் அட்சய திருதியை சிறப்பு விற்பனை
ADDED : மே 01, 2025 05:03 AM

கடலுார் : கடலுார், வள்ளி விலாசில் அட்சய திருதியை முன்னிட்டு புதுப்புது டிசைன்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த நகைகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச்சென்றனர்.
கடலுார், திருப்பாதிரிப்புலியூர் சுப்ராய செட்டித் தெருவில் பாரம்பரியமிக்க வள்ளி விலாஸ் ஜூவல்லரியில் அட்சய திருதியை சிறப்பு விற்பனை நேற்று துவங்கியது. இதுகுறித்து உரிமையாளர் முரளி கூறுகையில், 'அரசு உத்தரவுப்படி HUID ஆறு இலக்க முத்திரையுடன் அனைத்து நகைகளும் விற்பனை செய்யப்படுகிறது.
புதுப்பொலிவுடன் விரிவுபடுத்தப்பட்ட ஷோ ரூம்களில் கண்களை கவரும் டிசைன்களுடன் நகைகள் விற்பனைக்கு வரவழைக்கப் பட்டுள்ளது.
மும்பை, கொல்கத்தா, ராஜ்கோட், கேரளா உள்ளிட்ட இடங்களில் இருந்து ஏராளமான புதுப்புது டிசைன்களில் தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. குறைந்த சேதாரம், செய்கூலியுடன் நகைகள் விற்பனை செய்யப்படுகிறது.
தங்க நகை சிறு சேமிப்பு திட்டங்கள் உள்ளது. இந்நாளில் நகைகள் வாங்கி செல்வ செழிப்புடன் வாழ வாழ்த்துகிறோம்' என்றார். காலை 8.30மணிக்கு அட்சய திருதியை சிறப்பு விற்பனை துவங்கியது. ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் நகைகளை வாங்கிச்சென்றனர்.