/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தொழில் உரிமம் புதுப்பிக்க நகராட்சியில் சிறப்பு முகாம்
/
தொழில் உரிமம் புதுப்பிக்க நகராட்சியில் சிறப்பு முகாம்
தொழில் உரிமம் புதுப்பிக்க நகராட்சியில் சிறப்பு முகாம்
தொழில் உரிமம் புதுப்பிக்க நகராட்சியில் சிறப்பு முகாம்
ADDED : பிப் 17, 2024 11:58 PM

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் நகராட்சியில், வர்த்தகர்கள் தொழில் உரிமம் பெறுவதற்கும், புதுப்பிக்கவும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.
நெல்லிக்குப்பம் நகராட்சி பகுதிகளை சேர்ந்த வர்த்தகர்கள் கலந்து கொண்டு இதுவரை உரிமம் பெறாதவர்கள் புதியதாக பெறவும், உரிமம் வைத்துள்ளவர்கள் புதுப்பிக்கவும் மனு அளித்தனர்.
கமிஷனர் கிருஷ்ணராஜன் முன்னிலையில் துப்புரவு ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் மனுக்களை பெற்று உடனடியாக தொழில் உரிமம் சான்று வழங்கினார். வர்த்தக சங்க செயலாளர் ராமலிங்கம் தலைமையில் வர்த்தகர்கள் உரிமம்பெற்றனர்.
முகாம் குறித்து கமிஷனர் கிருஷ்ணராஜன் கூறுகையில், நகராட்சி பகுதியில் எந்த தொழில் செய்தாலும் தொழில் உரிமம் கட்டாயம் தேவை. அதற்கான முகாமில் எளிதாக கட்டணம் செலுத்தி உடனே பெற்று கொள்ளலாம்.
ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, ஜி.எஸ்.டி., நகல், வீட்டுவரி ரசீது, புகைப்படத்துடன் கட்டணம் செலுத்தி பெற்று கொள்ளலாம். மார்ச் 31ம் தேதிக்குள் அபராதம் இல்லாமல் புதுப்பித்து கொள்ளலாம் என, தெரிவித்தார்.