ADDED : பிப் 17, 2024 04:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் நகராட்சியில் தொழில் உரிமம் பெறுவதற்கான சிறப்பு முகாம் நடந்தது.
இதில் புதிய உரிமம் பெறவும், உரிமம் புதுப்பிக்கவும் வர்த்தகர்கள் மனு அளித்தனர்.
கமிஷ்னர் கிருஷ்ணராஜன் முன்னிலையில், துப்புரவு ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் மனுக்களை பெற்று, உடனடியாக சான்று வழங்கினார்.
கமிஷனர் கிருஷ்ணராஜன் கூறுகையில், 'நகராட்சி பகுதியில் தொழில் செய்ய உரிமம் கட்டாயம் தேவை. அதற்கான முகாமில் எளிதாக கட்டணம் செலுத்தி உடனே பெற்று கொள்ளலாம்.
மார்ச் 31ம் தேதிக்குள் அபராதம் இல்லாமல் புதுப்பித்து கொள்ளலாம்' என்றார்.