/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தொழில் முனைவோர் கடன் பெற கடலுாரில் நாளை சிறப்பு முகாம்
/
தொழில் முனைவோர் கடன் பெற கடலுாரில் நாளை சிறப்பு முகாம்
தொழில் முனைவோர் கடன் பெற கடலுாரில் நாளை சிறப்பு முகாம்
தொழில் முனைவோர் கடன் பெற கடலுாரில் நாளை சிறப்பு முகாம்
ADDED : பிப் 21, 2024 10:53 PM
கடலுார் : கடலுாரில் தொழில்முனைவோர் வங்கிக் கடன் பெற விண்ணப்பிக்கும் சிறப்பு முகாம் நாளை (23ம் தேதி) நடக்கிறது.
கடலுார் மாவட்ட தொழில் மையம் சார்பில், குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன் வசதியாக்கல் முகாம், கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நாளை (23ம் தேதி) காலை 10:00 மணிக்கு நடக்கிறது. நிகழ்ச்சியில் தொழில் மையம் அலுவலர்கள், முன்னோடி வங்கி மேலாளர்கள், அனைத்து வங்கி கிளை மேலாளர்கள், திட்ட பயணாளிகள் மற்றம் அரசு அலுவலர்கள் பங்கேற்கிறார்கள்.
தொழில்முனைவோர், பெண்கள், இளைஞர்கள் கடன் விண்ணப்பித்து இது வரை கடன் ஒப்பளிப்பு பெறாதவர்கள், புதிதாக தொழில் துவங்க கடன் பெற விண்ணப்பிக்கலாம். முகாமில், தொழில்முனைவோர், மகளிர், இளைஞர்கள் முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என, கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.