/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மின்வாரிய அலுவலகத்தில் நாளை சிறப்பு முகாம்
/
மின்வாரிய அலுவலகத்தில் நாளை சிறப்பு முகாம்
ADDED : ஏப் 04, 2025 04:57 AM
கடலுார்: கடலுார் மின்வாரிய கோட்ட அலுவலகத்தில் நாளை நுகர்வோர் மற்றும் பொதுமக்களுக்கான சிறப்பு முகாம் நடக்கிறது.
கடலுார் மின்வாரிய செயற்பொறியாளர் அருளானந்தன் செய்திக்குறிப்பு:
கடலுார் கோட்ட அலுவலகத்தில் மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்களிடமிருந்து மின் கட்டணத் தொகை, மின் மீட்டர்கள், குறைந்த மின்னழுத்தம், சேதமடைந்த மின் கம்பங்கள் மாற்றுதல் உள்ளிட்ட அனைத்து மின்சாரம் தொடர்பான புகார்கள் இருந்தால் அதை நிவர்த்தி செய்ய நாளை (5ம் தேதி )காலை 11:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை சிறப்பு முகாம் நடக்கிறது.
கடலுார் இயக்குதலும், பராமரித்தலும் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் முகாம் நடக்கிறது. அன்று பெறப்படும் மின் மீட்டர்கள் பழுது, குறைந்த மின்னழுத்தம், சேதமடைந்த மின் கம்பங்கள் மாற்றுதல் உள்ளிட்ட அனைத்து மின்சாரம் தொடர்பான புகார்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டு நுகர்வோர் மற்றும் பொதுமக்களுக்கு அதன் விவரங்கள் தெரிவிக்கப்படும். மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

