/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்
/
காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்
ADDED : டிச 18, 2024 07:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திட்டக்குடி : திட்டக்குடி அடுத்த ஆவினங்குடியில் சிறப்பு காய்ச்சல் மருத்துவ முகாம் நடந்தது.
இ.கீரனுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நடந்த முகாமிற்கு, வட்டார மருத்துவ அலுவலர் திருமாவளவன் தலைமை தாங்கினார். மருத்துவர் சங்கீதா தலைமையிலான குழுவினர் பொது மக்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் குறித்து பரிசோதனை செய்து, மருந்து மாத்திரைகள் வழங்கினர். பின்னர் பொது மக்களுக்கு காய்ச்சிய குடிநீரை குடிக்குமாறு அறிவுறுத்தினர். அப்போது, சுகாதார ஆய்வாளர்கள் விஜயரங்கன், மதனகோபாலன் உட்பட பலர் பங்கேற்றனர்.