/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
துாய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
/
துாய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
ADDED : டிச 11, 2024 06:18 AM

பெண்ணாடம், ; பெண்ணாடம் தேர்வுநிலை பேரூராட்சி அலுவலகத்தில், துாய்மை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் நடந்த முகாமிற்கு, பேரூராட்சி சேர்மன் அழுதலட்சுமி ஆற்றலரசு தலைமை தாங்கினார். துணை சேர்மன் குமரவேல் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் பாஸ்கரன் வரவேற்றார்.
மருத்துவ பணியாளர்கள், செவிலியர்கள், பேரூராட்சி பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
இதில், பெண்ணாடம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமையிலான மருத்துவர்கள் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள், மகளிர் சுயஉதவி குழு பணியாளர்களுக்கு பொது மருத்துவ பரிசோதனை, உயர் ரத்த பரிசோதனை செய்து மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.