/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பரவலுாரில் சிறப்பு மருத்துவ முகாம்
/
பரவலுாரில் சிறப்பு மருத்துவ முகாம்
ADDED : நவ 16, 2024 02:38 AM

விருத்தாசலம்: வடகிழக்கு பருவமழையையொட்டி, விருத்தாசலம் அடுத்த பரவலுாரில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
முகாமிற்கு, மங்கலம்பேட்டை வட்டார மருத்துவ அலுவலர் பாலச்சந்தர் தலைமை தாங்கினார். நடமாடும் மருத்துவ குழு மருத்துவர் லாவண்யா தலைமையிலான குழுவினர், பொதுமக்களை பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர்.
அதைத்தொடர்ந்து டெங்கு காய்ச்சல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதேபோல் சிறுவம்பார் கிராமத்தில் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணி நடந்தது.
இதில் பரவலுார் ஊராட்சி தலைவர் பூமாலை, ஊராட்சி செயலாளர் அண்ணாதுரை, சிறுவம்பார் ஊராட்சி தலைவர் ஜெயக்கொடி கோவிந்தராஜ், ஊராட்சி செயலாளர் பாலு, மங்கலம்பேட்டை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் துளசிதாஸ், சுகாதார ஆய்வாளர்கள் முருகவேல், கார்த்திகேயன், ராஜ்மோகன், முல்லைநாதன், பரத் ராஜ்குமார், தாண்டவராயன், அவினாஷ், சதிஷ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
மருத்துவர் பாலச்சந்தர் கூறுகையில், பருவமழை காலங்களில் பொதுமக்கள் தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும். தங்களது தெரு மற்றும் வீடுகளை சுற்றி தேவையற்ற டயர், உரல், மழைநீர் தேங்காய் ஓடுகள், பிளாஸ்டிக் பொருட்களில் மழைநீர் தேங்காத வண்ணம் அப்புறப்படுத்த வேண்டும். காய்ச்சல் உள்ளிட்ட தொந்தரவுகள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும் என்றார்.