ADDED : ஜூலை 21, 2025 05:07 AM

விருத்தாசலம், : விருத்தாசலம் ஏ.எம்.சி., கிளினிக்கில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது
விருத்தாசலம் எலைட் ரோட்டரி சங்கம், புதுச்சேரி விநாயகா மிஷன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, ஏ.எம்.சி., கிளினிக் ஆகியன இணைந்து முகாமிற்கு ஏற்ாபடு செய்திருந்தது. எலைட் ரோட்டரி சங்க தலைவர் குமார் தலைமை தாங்கினார்.
முன்னாள் மாவட்ட செயலாளர் வெங்கடேசன் வரவேற்றார். உதவி ஆளுநர் அசோக்குமார் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினர் ஆர்.டி.ஓ., விஷ்ணு பிரியா முகாமை துவக்கி வைத்தார். முன்னாள் மாவட்ட ஆளுநர் விஸ்வேஸ்வரன் பேசினார்.
டாக்டர் செல்வம், விநாயகா மிஷன் சிறப்பு மருத்துவ குழுவினர் சர்க்கரை, இருதயம், சிறுநீரக நோய், பொது மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் குறித்து பரிசோதனைகள் செய்து சிகிச்சை அளித்தனர்.
நிகழ்ச்சியில் இருதய நோய் சிறப்பு மருத்துவர் அருண் பிரசாத், முன்னாள் அரசு வழக்கறிஞர் விஜயகுமார், ரோட்டரி சங்க நிர்வாகிகள் ஆனந்த், ராம்சன், முகமது அன்வர், முகமது இக்பால், வெங்கடேசன், பெரியமூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
செயலாளர் சுவாமிநாதன் நன்றி கூறினார்.