ADDED : டிச 30, 2025 05:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அருள்தரும் ஐயப்ப சுவாமி கோவிலில் படி பூஜை நடந்தது.
நெல்லிக்குப்பம் அருள்தரும் ஐயப்ப சுவாமி கோவிலில் கார்த்திகை மாதம் ஒன்றாம் தேதி முதல் சபரிமலை ஐயப்ப சுவாமி கோவிலில் நடப்பது போன்று, மண்டல, மகர விளக்கு பூஜைகள் நடந்து வருகிறது.
நேற்று முன்தினம் சிறப்பு பூஜைகள் நடந்தது. ஐயப்ப சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். 18 படிகள் அமைத்து பஜனை பாடல்களை பாடினர்.
செயலாளர் ராதா, பொருளாளர் பழனி, குருசாமிகள் சிவகுருநாதன், கல்யாணசுந்தரம், கமலக்கண்ணன், சாமிபிள்ளை, அன்பழகன், குமார் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

