/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜை
/
சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜை
ADDED : ஜூலை 21, 2025 04:54 AM

நெல்லிக்குப்பம் :  நெல்லிக்குப்பம் வீரபத்திர சுவாமி கோவிலில் ஆடி மாத கிருத்திகையொட்டி சுப்ரமணிய சுவாமிக்கு  சிறப்பு பூஜைகள் நடந்தது.
நெல்லிக்குப்பம், கீழ்பட்டாம்பாக்கம் வீரபத்திர சுவாமி கோவிலில் ஆடி மாத கிருத்திகையொட்டி  சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு யாகம் நடத்தி 108 சங்காபிஷேகம் நடந்தது. மூலவர் வள்ளி தேவசேனா சமேதராய் சுப்ரமணிய சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் கோவிலை வலம் வந்து அருள்பாலித்தார். பூஜைகளை லோகு குருக்கள் செய்தார். அருள்தரும் ஐயப்ப சுவாமி, பூலோகநாதர், வரசித்தி விநாயகர் உள்ளிட்ட கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.
இதேப் போன்று, விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சண்முக சுப்ரமணியர், 28 ஆகம சன்னதியில் உள்ள குமரேச சுவாமிகளுக்கும், மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர்,  மங்கலம்பேட்டை பாலதண்டாயுதபாணி உள்ளிட்ட கோவிலிலகளிலும் கிருத்திகை வழிபாடு நடந்தது.

